புவி வெப்பமயமாதல் குறித்து நடுக்கடலில் நிகழ்த்தப்பட்ட விநோதமான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Jul 11, 2019 11:25 AM 136

ஸ்பெயினில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன்பீஸ் என்ற அமைப்பு, புவி வெப்பமயமாதல் குறித்து நடுகடலில் விநோதமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பலரின் கவனத்தை ஈர்த்தது.

ஸ்பெயின் நாட்டில் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன்பீஸ் அமைப்பு, உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. நடுகடலில் மரத்தினால் செய்யப்பட்ட பெரிய தோசைக்கல் வைக்கப்பட்டு, அதில் ஆம்லெட் சுடுவது போன்று வடிவமைக்கப்பட்டது. புவி வெப்பமயமாதலை உணர்த்தும் வகையில், மஞ்சள் கருவில், உலக வரைபடம் இடம் பெற்றிருந்தது. இரண்டு படகுகளின் உதவியின் மூலம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாகவும், உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

Comment

Successfully posted