பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

Jun 28, 2019 04:51 PM 179

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Comment

Successfully posted