தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

Dec 29, 2018 03:44 PM 437

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து சிவகாசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் சிவகாசி காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடைபெற்றது. வட்டார காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் இருவரும் பேரணியை தொடங்கி வைத்தனர். பேரணியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருமே தலைக்கவசம் அணிய வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் வாகனங்களை இயக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த பேரணியில் 150க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தவாறு, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Comment

Successfully posted