தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை

Sep 17, 2021 03:05 PM 277

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூரில், திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தனியார் கல்லூரி முன் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது.

இம்மையத்தில், கடந்த புதன்கிழமை 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வங்கி ஊழியர்கள் நிரப்பியுள்ளனர்.

பாதுகாப்பாளர் இன்றி இருக்கும் இந்த ஏடிஎம் மையத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்றிரவு வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

image

சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அரக்கோணம் கிராமிய காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Comment

Successfully posted