அயோத்தி விவகாரம் : சமரச பேச்சு வார்த்தை தொடங்கியது

Mar 14, 2019 06:54 AM 58

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த சமரச குழு பேச்சுவார்த்தையை தொடங்கியது. அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது இந்த சமரச குழு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள அவாத் பல்கலைக்கழகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் குழுவினர் பைசாபாத் சென்று சமரச பேச்சுவார்த்தையை தொடங்கினர். இதற்காக வழக்கின் 25 மனுதாரர்கள் தங்கள் வக்கீல்களுடன் சமரச குழு முன் ஆஜராகினர்.

Comment

Successfully posted