அயோத்தி தீர்ப்பின் மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

Nov 09, 2019 08:34 PM 138

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் அனைத்து பிரிவினரும் அமைதி காத்துள்ளதாகவும் இந்த தீர்ப்பின் மூலம் பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பொறுமையாக விசாரித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், இந்தத் தீர்ப்பினால் நாடே பெருமைப்படுவதாகவும், நாட்டு மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தீர்ப்பு வெளியான இந்த நாள் ஒற்றுமைக்கும், வளர்ச்சி நோக்கிய சிந்தனைக்கும் உரிய நாளாகத் திகழ்கிறது எனப் பிரதமர் மோடி பேசினார்.

Comment

Successfully posted