ஆயுத பூஜை, விஜயதசமி விற்பனை இந்தாண்டு குறைவு: வியாபாரிகள்

Oct 07, 2019 12:27 PM 86

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜை விற்பனை கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று ஆயுத பூஜையும் நாளை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகளவில் விற்பனை நடைபெறும் என்று எண்ணிய வியாபாரிகள் பூஜைக்கான பொருட்களை அதிகளவில் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு சென்றதே விற்பனை குறைந்தற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted