அட்சயநாத சுவாமி கோயில் கிணற்றில் பொங்கி வரும் நீர்

Dec 06, 2018 08:00 PM 349

திருவிடைமருதூர் அருகே உள்ள கோயில் கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி வருவதையடுத்து, பக்தர்கள் அதில் நீராடி வருகின்றனர்.


தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருமாந்துரையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அட்சயநாத சுவாமி கோயில், 3 ஆயிரம் பழமை வாய்ந்தது. சந்திர தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த கோயில் தீர்த்தம் பல்வேறு சிறப்புகளை உடையது. இந்த நிலையில், சந்திர கிணற்றில் இருந்து தண்ணீர் பொங்கி நிரம்பி வருகிறது.

பொதுமக்கள், சந்திரதீர்த்தத்தில் நீராடியும், பாட்டில்களில் நீர் சேகரித்தும் செல்கின்றனர். இந்த கிணற்றில் இருந்து நீர் பொங்கி வருவதை இதற்கு முன் பார்த்ததில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Comment

Successfully posted