வரும் மார்ச் மாதம் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும் பிசிசிஐ அறிவிப்பு

Jan 08, 2019 06:36 PM 470

2019 ஐபிஎல் போட்டிகள், இந்தியாவில் வரும் மார்ச் மாதம் தொடங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் நியமத்த நிர்வாகக் குழு, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து மும்பை பிசிசிஐ அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியது. பின்னர், இந்தியாவிலேயே, ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்க இருக்கிறது. விரைவில் அட்டவணை வெளியிடப்பட இருக்கிறது. கடந்த 2009 மற்றும் 2014 பொதுத்தேர்தலின் போது, ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்பட்டன. இந்தாண்டும், வெளிநாட்டில் நடக்கும் என்று கருதப்பட்ட நிலையில், வரும் மே மாதம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால், அதற்கு முன்பாக ஐபிஎல் போட்டிகளை முடிக்கும் வகையில், மார்ச் மாதத்தில் தொடங்க முடிவு செய்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted