ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால்: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு

Apr 14, 2020 04:08 PM 2783

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதால், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.  13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப் படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்த பின் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comment

Successfully posted