இந்திய கிரிக். அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 6 பேர் பரிந்துரை

Aug 13, 2019 10:14 AM 343

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி உட்பட 6 பேரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலை, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான குழு விரைவில் நடத்தவுள்ள நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி உட்பட 6 பேரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, முன்னாள் இந்திய வீரர்களான லால்சண்ட் ராஜ்புட், ராபின் சிங், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரையும், முன்னாள் நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெசன், முன்னாள் இலங்கை பயிற்சியாளர் டாம் மூடி, முன்னாள் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஃபில் ஜோன்ஸ் ஆகியோரையும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

இதனையடுத்து, பரிந்துரை செய்யப்பட்டவர்களிடம் கபில் தேவ் தலைமையிலான குழு விரைவில் நேர்காணல் நடத்துகிறது. நேர்காணலுக்கு பிறகு, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted