மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் அழைப்பு

Nov 09, 2019 10:48 PM 76

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட பேரவையில் ஆட்சியமைக்க 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இந்நிலையில் கூட்டணிக் கட்சியான சிவசேனா தொடர்ந்து முதலமைச்சர் பதவியை தர வேண்டும் எனக் கோருவதால், பெரும்பான்மையை பாஜக நிரூபிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Comment

Successfully posted