ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் சைனி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Jun 25, 2019 12:16 PM 273

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனியின் மறைவை அடுத்து இன்று நடைபெற இருந்த பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மதன் லால் சைனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் தொண்டர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு சென்ற ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோர் மதன் லால் சைனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே மதன் லால் சைனியின் மறைவு காரணமாக இன்று நடைபெற இருந்த பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதன் லால் சைனியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Comment

Successfully posted