மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக தர்ணா போராட்டம்

May 15, 2019 04:48 PM 81

மேற்கு வங்காளத்தில் வன்முறையை தூண்டி விடுவதாக மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் வாயில் விரலை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நடத்திய பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. தீவைப்பு சம்பவமும் நடைபெற்றது. இந்த விவகாரம் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே மம்தா பானர்ஜியை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பாரதிய ஜனதா சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், விஜய் கோயல், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அமைச்சர்கள் வாயில் விரலை வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை தவிர வேறு யாரும் பிரசரத்தில் ஈடுபடக்கூடது என அம்மாநில அரசு வன்முறையை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

Comment

Successfully posted