குஜராத் ராஜ்யசபா தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத்தாக்கல்

Jun 25, 2019 07:36 AM 285

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.

பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுப்ரமணியம் ஜெய்சங்கரும், ஜுகல்ஜி மதுர்ஜி தகோரும் குஜராத் மாநிலத்தில் இருந்து, பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத்- காந்தி நகரில் இன்று காலை 11 மணிக்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted