ரஃபேல் விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பாஜகவினர் போராட்டம்

Nov 16, 2019 03:33 PM 63

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயமடைவதற்காகவே ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தை அரசு செய்துகொண்டதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். ரபேல் வழக்கில் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அரசின் மீது ராகுல்காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என மெய்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. இதற்காக ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் பாஜக கோரி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு ராகுல்காந்திக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Comment

Successfully posted