தி.மு.க.வினரைக் கண்டித்து சென்னையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்!

Sep 22, 2020 07:13 PM 831

பா.ஜ.க.-வின் சுவர் விளம்பரங்களை அழித்து, பெண்கள் உள்பட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.-வினரைக் கண்டித்து, சென்னையில் 7 இடங்களில் பா.ஜ.க.-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, சென்னை நங்கநல்லூர் பகுதியில் பா.ஜ.க. சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்ததோடு, பா.ஜ.க. மகளிரணி நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தி.மு.க.-வினரின் அடாவடியைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தியும் சென்னையில் 7 இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் ராஜா தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Comment

Successfully posted