பாபர் மசூதி இடிப்பு தினம் : பல்வேறு பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு

Dec 06, 2018 02:13 PM 67

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சோதனை வளையம் அமைக்கப்பட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கின்றனர். தஞ்சை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comment

Successfully posted