துர்க்கை படத்துடன் ஆற்றில் மிதந்து வந்த பெட்டி ? கிடைத்த பொக்கிஷம் என்ன?

Jun 17, 2021 10:44 AM 1205

தளபதி திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல், உத்தரபிரதேசத்தில் ஆற்றில் விடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குல்லு தாத்ரி வனப்பகுதியில் கங்கை ஆற்று கரையில் குழந்தையின் அழுகுரல் கேட்டதை அறிந்த தொழிலாளி, ஆற்று நீரில் மிதந்த மரப்பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது, உள்ளே, பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் சிசு இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். பெட்டிக்கு உள்ளே துர்க்கை படம், ஜாதகம் போன்றவைகளுடன் கங்கையின் மகள் என எழுதப்பட்டிருந்தது. அந்த குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
image

Comment

Successfully posted