மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ஜாமீன்!!!

May 24, 2020 01:18 PM 465

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த விவகாரம் தொடர்பாக, 12 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் உள்ளவர்கள் போராட்டம் நடத்தியோடு சைமனின் உடல் எடுத்து வரப்பட்ட ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக, 12 கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், 12 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Comment

Successfully posted