டெல்லியில் பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்

Oct 17, 2019 09:53 AM 83

பஜாஜ் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பஜாஜ் நிறுவனத்தின் முதல் மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

1980-90 ஆம் ஆண்டுகளில் இந்திய சாலைகளில் கொடிகட்டி பறந்த செடாக் வாகனத்தின் பெயரை புதிய மின்சார வாகனத்திற்கு பஜாஜ் சூட்டி உள்ளது. எல்இடி லைட், டிஜிட்டர் மீட்டர் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாராகி உள்ள செடாக் மின்சார இருசக்கர வாகனம், அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது. 5 மணி நேரம் ரீசார்ஜ் செய்தால், 85 முதல் 95 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted