பப்ஜி ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை

Sep 02, 2020 09:30 PM 1581

பப்ஜி ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த ஜூன் மாதம், கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சீன நிறுவனங்களின் தயாரிப்புக்களை புறக்கணித்ததோடு, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு, கடந்த ஜூன் 29ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆப்-லாக், க்ளீனர், மியூசிக் பிளேயர், எம்வி மாஸ்டர், கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீ-சாட், லூடோ வேர்ல்டு, ரைஸ் ஆஃப் தி கிங்டம், ஸ்மார்ட் ஆப் லாக் உள்ளிட்ட செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் சுமார் 18 கோடி பேர் பப்ஜி ஆன்லைன் விளையாட்டை பதிவிறக்கம் செய்திருந்ததும், இளைஞர்கள் சிலர் இந்த விளையாட்டு மூலம் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted