ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டு தடை விதிப்பு: ஐசிசி

Oct 30, 2019 10:05 AM 287

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2 ஆண்டு தடை விதித்துள்ளது. சூதாட்ட இடைத்தரகர்கள் அனுகியது தொடர்பாக முறையான விளக்கத்தை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியதுடன் சர்வதேச போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி இந்தியாவுடனான இருபது ஓவர் தொடர் தொடங்க உள்ள நிலையில், வங்கதேசத்தின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Comment

Successfully posted