வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட்டில் 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

Sep 10, 2019 08:36 AM 742

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சர்வதேச அரங்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது

இவ்விரு அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் கொண்ட தொடர் வங்கதேசத்தின் சட்டோகிராமில் நடைபெற்றது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 342 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து வங்கதேச அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை விரட்டிய வங்கதேச அணி 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுல் ஆனது. இதன்மூலம் 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்று சர்வதேச அரங்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கன் அணியின் கேப்டன் ரஷித் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Comment

Successfully posted