கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

Apr 25, 2021 02:20 PM 682

கொரோனா பரவல் காரணமாக வங்கிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் அரசு மற்றும் தனியார் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் சேவை முறையை பயன்படுத்தவேண்டும் எனவும், காசோலைகளை ஏடிஎம்மில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted