மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு- அமைச்சர் செங்கோட்டையன்

Oct 14, 2018 07:17 AM 580

மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,பள்ளிக்கல்வித் துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். விரைவில் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக பாலீத்தீன் பயன்படுத்தாத நிலை உருவாக்கப்படும் எனவும் கூறினார்.மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் விதமாக, வங்கி மற்றும் அஞ்சலகங்களில் ஜீரோ பேலண்ஸ் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் இயங்கி வரும் தமிழக அரசு, அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார். தமிழக போக்குவரத்து துறை, சேவை நோக்குடன் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்கி , இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு தெரிவித்துள்ளார்

Comment

Successfully postedSuper User

கல்வி புரட்சியாளரே வணங்குகிறேன் தலைவரே


Super User

அரசுபள்ளிக்கூடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது...அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்...மிக்க நன்றி..