பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும்: ஆளுநர்

Oct 09, 2019 02:58 PM 129

பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணியை அவர் தொடங்கி வைத்தார். இந்த பணியானது முதன் முறையாக செல்போன் செயலி வழியாக மேற்கொள்ளபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொருளாதார கணக்கெடுப்பு என்பது நாட்டுக்கு மிக முக்கியம் என்றும் இந்த பணிகளில் ஈடுபடுவது நாட்டுக்காக செய்யப்படும் சேவை எனவும் கூறினார். தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comment

Successfully posted