திண்டுக்கல் மலைக்கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மக்கள் கோரிக்கை

Jun 08, 2019 09:44 AM 391

திண்டுக்கல் மலைக்கோட்டையில் பல அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டையில் விஜயநகர பேரரசின் சிற்ப கலையை உணர்த்தும் சிற்பங்கள், நீர் சுனைகள், தூண்கள், கோயில், பாதாள சிறைகள் என வரலாற்று எச்சங்கள் நிறைய உள்ளன. இந்த மலைக்கோட்டையை சுற்றி பார்ப்பதற்கு தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றன. அங்கு பெரியவர்களுக்கு 25 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் அக்கோட்டையில் கழிப்பறை, குடிநீர், தடுப்புவேலி, நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted