ஆந்திர மாநிலம் கர்னூலில் அமைச்சர், தொண்டர்களை சரமாரியாக கொட்டிய தேனீக்கள்

Nov 30, 2019 09:40 PM 269

ஆந்திர மாநிலம் கர்னூலில் அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் தேனிக் கூட்டம் நுழைந்து சரமாரியாக கொட்டியது.

ஆந்திர நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அனில் குமார் யாதவ் கர்நூல் மாவட்டத்திலுள்ள பனகச்சேர்லா கிராமத்தில், மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைப் பார்வையிட சென்றிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த தேனீக் கூட்டம் அமைச்சர் மற்றும் அவருடன் இருந்தவர்களை சரமாரியாக கொட்டியது. இதையடுத்து அவசர அவசரமாக காரில் ஏறினார். அமைச்சருடன் வந்த நபர் ஒருவர் தேனிக்களிடமிருந்து தப்பிப்பதற்கான துணியால் முகத்தை மூடினார். எனினும் அவரைத் தேனீக்கள் விடாமல் கொட்டின.

Comment

Successfully posted