இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ,விநாயகர் கோயிலில் துணை முதலமைச்சர் வழிபாடு!

Feb 23, 2021 10:09 AM 2952

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.


தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஒ. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

11 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள அவர், பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள இயற்கை ஆலமர விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

Comment

Successfully posted