உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான பணிகள் தொடக்கம்

Jul 29, 2019 11:41 AM 281

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக சுமார் 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுகள் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவை காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா நிர்வாகம் சார்பில் பல லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். செப்டம்பர் மாதம் தொடங்கி இரு மாதங்கள் இரண்டாம் சீசனுக்காக, பூங்காவில் 2 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக, 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் நாற்று நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் சீசன் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted