கோயில் விழாக்களை ஒளிப்பதிவு செய்யும் பணி துவக்கம்!!

Jul 06, 2020 01:08 PM 414

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளை ஒளிபரப்ப திருக்கோவில் எனும் பெயரில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டபேரவை கூட்டுத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளை பரப்பிட திருக்கோவில் எனும் பெயரில் தொலைக்காட்சி தொடங்க 8 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும் பணிகள் தொடங்கியிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. திருக்கோவில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்யும் வகையில் ஒவ்வொரு கோயில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. படம்பிடிக்கும் போது கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு விரிவாக வெளியிட்டுள்ளது.

Comment

Successfully posted