மூழ்கும் கப்பலில் இருக்க யார் தான் விரும்புவார்கள்: திரிணாமுல் காங். குறித்து பாஜக விமர்சனம்

May 24, 2019 08:51 PM 243

மூழ்கும் கப்பலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்க யார் தான் விரும்புவார்கள் என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவை தேர்தலின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் தாண்டி பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்தநிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், ஆரம்பம் முதலே பல திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறிய திலிப் கோஷ், நேரம் வரும்போது மம்தா பானர்ஜியின் அரசு கவிழ்க்கப்படும் என்றார்.

மூழ்கும் கப்பலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்க யார் தான் விரும்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted