கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி

Jan 18, 2020 11:44 AM 439

தூத்துக்குடியில் கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.

சென்னையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், தனது குடும்பத்தினருடன் இரண்டு கார்களில் திருச்செந்தூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். ஒரு காரில் சுபாஷ், அவரது மனைவி மற்றும் மகனுடனும், மற்றொரு காரில் அவரது பேரன், பேத்தி மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேரும் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது மதுரை-தூத்துக்குடி புறவழி சாலையில் உள்ள பாலத்தில் ஏறி திரும்ப முயன்ற போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி 2வது காரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 4 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், 4 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Comment

Successfully posted