வைரமுத்து புகார் குறித்து பதில் அளிக்காமல் வெளியேறிய பாரதிராஜா

Oct 16, 2018 12:05 PM 328

இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு சென்ற இயக்குனர் பாரதிராஜா, அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள தமிழர்களும் இலங்கையில் உள்ள தமிழர்களும் ஒரே மாதிரியான உணர்வையும், திறமையும், கலை படைப்பையும் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டார். தமிழ் சினிமா வளர்ச்சி அடைந்தது போன்று, ஈழத்து சினிமா வளர்ச்சி அடையவில்லை என அவர் கூறினார்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இதற்கு பதில் அளிக்க முடியாது என்று அவர் கூறினார்.

மீண்டும் மீண்டும் அதே கேள்விகள் எழுப்பப்படவே ஆத்திரம் அடைந்த பாரதிராஜா செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறினார்.

Comment

Successfully posted

Super User

பொறுமை இழந்து கோபப்பட்டு ஏதாவது பேசினால் பிரச்சினைகள் வந்து விடும் என்று போய் விட்டாரோ?