பவானி சாகர் அணை முழுகொள்ளளவை எட்டியது

Aug 15, 2018 12:25 PM 458

அணைக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நள்ளிரவில் அணை திறக்கப்பட்டது. அணையிலிருந்து 25 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 130 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Comment

Successfully posted