சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு

Dec 16, 2018 02:56 PM 303

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றிப்பெற்றது.

முதலமைச்சரை தேர்வு செய்வதில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பூபேங்ஷ பாகெல் மற்றும் மூத்த தலைவர் டிஎஸ் சிங் டியோ ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.

டெல்லியில் ராகுல் காந்தியுடன் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று ராய்ப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில், புதிய முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டார். நாளை மாலை பதவியேற்பு விழா நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான கோப்பில் பூபேஷ் பாகெல் முதல் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

Comment

Successfully posted