அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி

Nov 20, 2019 09:25 PM 107

அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி பீகாரில் உள்ள மகாபோதி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

பூடான் வெளியுறவுத்துறை அமைச்சர் டண்டி டோர்ஜி அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பீகாரில் புத்தர் ஞானோதயம் பெற்ற மகாபோதி ஆலயத்தில் டண்டி டோர்ஜி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு மகாபோதி ஆலயத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

Comment

Successfully posted