"பிகில்" படக் காப்புரிமை கோரி மீண்டும் வழக்குத் தொடுக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

Oct 22, 2019 07:57 PM 495

"பிகில்" திரைப்படத்தின் கதைக்குக் காப்புரிமை கோரி வழக்குத் தொடுக்க உதவி இயக்குநர் செல்வாவுக்கு மீண்டும் அனுமதி வழங்கிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்து, அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள "பிகில்" திரைப்படத்தின் கதை தன்னுடையது எனவும், படத்தை வெளியிடத் தடை கோரியும் உதவி இயக்குநர் செல்வா என்பவர், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பின்னர், அந்த வழக்கை செல்வா திரும்பப் பெற்றார். காப்புரிமை தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகக்கூடாது என அப்போது நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, காப்புரிமை மீறல் தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டு செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "பிகில்" திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடுக்க செல்வாவுக்கு மீண்டும் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

Comment

Successfully posted