“பிகில்” படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Oct 17, 2019 05:49 PM 1962

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ள படம் “பிகில்”.ஜாக்கி ஷெராப், யோகி பாபு, விவேக், இந்துஜா என நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க,ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான பிகில் படத்தின் ட்ரெய்லர் இந்திய படங்களில் அதிக லைக்குகள் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இதனை தொடர்ந்து இருதினங்களுக்கு முன்பு படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்து படம் U/A சான்றிதழ் பெற்றது.

தீபாவளிக்கு இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் பிகில் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் பெரும் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் பிகில் படத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ட்விட்டரில் அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ட்விட்டரில் #BigilReleaseDate என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. 

அதன்படி பிகில் படமானது அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மெர்சல்’, ‘சர்கார்’ படங்களை தொடர்ந்து தொடர்ந்து 3 வது ஆண்டாக தீபாவளிக்கு விஜய் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted