பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Oct 02, 2019 08:23 AM 264

உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இமாச்சலம், உத்தரக்கண்ட், பஞ்சாப், அரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் கடந்த வாரம் கனமழை பெய்ததால் பிரயாக்ராஜ், வாரணாசி ஆகிய நகரங்களில் கங்கை ஆற்றங்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. கடந்த வாரம் முதல் உத்தரப்பிரதேசத்தில் மழை வெள்ளம் தொடர்பான நிகழ்வுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் மழை வெள்ளத்தால் 294 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நிவாரணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Comment

Successfully posted