அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு -தமிழகம் முழுவதும் 15 -ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடக்கம்

Nov 11, 2018 11:01 AM 623

அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவு திட்டத்தை, 15-ம் தேதி தமிழகம் முழுவதும் காணொலிக் காட்சி மூலம் தொடங்க உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையைக் கண்காணிக்க, பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவு திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவு திட்டத்தை, வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் காணொலிக் காட்சி மூலம் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

Comment

Successfully posted