ரத்தம் குடிக்கும் வல்லூறு கரண் ஜோஹர்: கங்கனா விளாசல்

Sep 02, 2020 09:28 PM 2569

கரண் ஜோகர் தன் குழந்தைகளை விளம்பரப்படுத்துவது வெட்கக் கேடானது என, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ட்வீட் செய்துள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு, அங்கு நிலவும் நெப்போடிசம்தான் காரணம் என குற்றம் சாட்டி வரும் கங்கனா ரணாவத், கரண் ஜோகர் உட்பட, பாலிவுட் தயாரிப்பாளர்களை கடுமையாக தாக்கி வருகிறார். இந்த நிலையில், ஊரடங்கு நேரத்தில், கரண் ஜோகர் குழந்தைகளுக்காக எழுதியுள்ள புத்தகத்தை வெளியிட ஆர்வமாக உள்ளதாக, அவருடைய குழந்தைகளுடன் வீடியோ வெளியிட்டு ட்வீட் செய்திருந்தார். அதை டேக் செய்து ரீட்வீட் செய்துள்ள கங்கனா, கரண் ஜோகர், ஆதித்யா சோப்ரா, மகேஷ் பட், ராஜீவ் மசந்த் உள்ளிட்ட ரத்த வெறிபிடித்த வல்லூறு மாஃபியாதான் சுஷாந்தை கொன்றது என கூறியுள்ளார். ஒரு குடும்பத்தின் ஒரே மகன் துன்புறுத்தப்பட்டு, சுரண்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கும் வேளையில், கரண் ஜோகர் தன் குழந்தைகளை விளம்பரப்படுத்துவது வெட்கக்கேடானது என கொந்தளித்துள்ளார்.

Comment

Successfully posted