கோலப்பன் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி

Jun 16, 2019 04:17 PM 60

ஜவ்வாது மலையில் 22 ஆம் ஆண்டு கோடை விழாவை முன்னிட்டு கோலப்பன் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போட்டிகள் நடத்தப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா கடந்த 2 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த வகையில், இறுதி நாளான இன்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பாரா கிளைடிங், வாட்டர் பலூன், வாத்து பிடிக்கும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகு போட்டியில் பங்கேற்றனர். 

Comment

Successfully posted