கங்கை நதியில் மோடி ஆய்வு

Dec 14, 2019 07:32 PM 721

கங்கை நதியின் தூய்மை பணிகளை, பிரதமர் மோடி படகில் சென்று பார்வையிட்டார்.

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக தேசிய கங்கா கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் முதல் கூட்டம், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கான்பூர் சென்ற பிரதமர் மோடியை, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் நடந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், கஜேந்திர சிங் செகாவத், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கங்கை நதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் குறித்தும், 'நமாமி கங்கா திட்டம்' குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் மோட்டார் படகில் சென்று கங்கை நதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

Comment

Successfully posted