லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

Feb 13, 2020 07:53 PM 474

லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 2 வழக்கறிஞர்கள் காயமடைந்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 2 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதலால் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted