புத்தக பிரியர்களின் திருவிழாவான சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

Jan 04, 2019 06:33 AM 399

புத்தக விரும்பிகளின் திருவிழாவான சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் 42-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள இந்த புத்தக கண்காட்சி, வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, புத்தக பிரியர்களுக்கு விருந்து படைக்கும் திருவிழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted