தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் இன்று தொடக்கம்

Oct 24, 2019 06:38 AM 335

தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக போக்குவரத்துறை சார்பில் 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு 3 நாட்களுக்கு நாட்கள் நடைபெறவுள்ளது. கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்து இன்று முதல் 26ம் தேதி வரை 4 ஆயிரத்து 265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக, சென்னையில் 310 சிறப்பு மாநகர பேருந்துகள், 24 மணி நேரமும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு மற்றும் கே.கே.நகர் ஆகிய 5 இடங்களில் இயங்கும் இந்த சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு, பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக மாநகர போக்குவரத்துக் கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Comment

Successfully posted