சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடக்கம்!

Sep 04, 2020 07:09 AM 915

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்க உள்ளதாகவும், ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாகவே பயணிகள் வர வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு ரயில்களில் பயணிக்க உள்ள பயணிகள், முன்பதிவு செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டால் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் எனவும், கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து முகக் கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரயில் புறப்படும் நேரத்திற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாக பயணிகள் வரவேண்டும் எனவும், ரயில்களில் பயணிகளுக்கு போர்வைகள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted