திமுகவினர் நூதன முறையில் தபால் மூலமாக பூத் ஸ்லிப் விநியோகம்!

Apr 05, 2021 08:56 AM 575

அண்ணாநகர் தொகுதியில், அஞ்சலக ஊழியர் மூலம் தி.மு.க.வினர் பூத் ஸ்லிப் விநியோகம் செய்து, விதிமீறலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய பூத் ஸ்லிப்பை, தபால்கள் மூலமாக அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக, தேர்தல் விதிமுறைகளை மீறி மத்திய அரசின் அஞ்சலக ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிமுக நிர்வாகிகள், அமைந்தகரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினரும், பறக்கும் படை அதிகாரிகளும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பூத் ஸ்லிப்புகளை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

imageimage

Comment

Successfully posted